Skip to main content

சிலப்பதிகாரக் கிளைக் கதைகள்

  
                     














           

                                  முதுமறையோன் கதை



            மணிமேகலை பெயரிடல் விழாவில் ,கோவலன் தரும் தானம் கொள்ளும் பொருட்டு ,கூன் விழுந்த முதுமறையோன் தண்டினை ஊன்றியவனாக வருகிறான் .அச்சமயம் பாகனுக்கும் அடங்காத யானை, மறையோனைப் பற்றியது. இதைக் கண்ட கோவலன் முதியவரைக் காப்பாற்றும் பொருட்டு விரைந்தான். ஓய் என்று கூவி யானையின் செயலைத் தடுத்து ,அந்த மறையவனை அதன் கையினின்றும் விடுவித்தான் .அதுமட்டும் இன்றி யானையின் பிடரி (கழுத்து ) மீது அமர்ந்து யானையின் சினத்தை அடக்கினான்.

                                                        _________________________


                              கீரிப்பிள்ளை கொன்ற கதை

 பூம்புகாரில் ஒரு பார்ப்பனப் பெண் கீரிப்பிள்ளையைக் கொன்றாள். அதனால் அவள் கணவன் அவளை விட்டு பிரிந்து சென்றான். .கைவிடப்பட்ட மனைவி பின்வர, உன் கையில் சாப்பிடுவது குற்றம் என்று கூறி ,வடமொழியில் எழுதிய வாசகத்தை மனைவியிடம் கொடுத்து ,கடமை அறிந்த மனிதனிடம் கொடுப்பாய் என்று  கூறி சென்றான். அவளோ தெருத்தெருவாக வீடுவீடாகச் சென்று அலைந்து ஓலைச்சுவடியின் பொருள் கூறி,கைப்பொருள் தரும்படி கேட்டாள்.எவராலும் இதற்க்கு பொருள் கூற முடியவில்லை.இறுதியில் கோவலன் அவளை அழைத்தான். உற்ற துயரத்தை வினவினான்.தான் செய்த குற்றத்தை கூறலானாள்.
      அவள் வீட்டில் ஒரு கீரிப்பிள்ளை வளர்ந்து வந்தது. அவள் குழந்தையிடம் அன்பாக பழகி வந்தது.ஒரு நாள் வெளியில் சென்று வீட்டை அடைந்த போது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. வீட்டு வாசலில் நின்றிருந்த கீரிப்பிள்ளை வாயில் ரத்தம். அதைக் கண்டவுடன் தன் குழந்தையைத் தான் உட்கொண்டது என்று எண்ணி பிள்ளையைக் கொன்றாள்.வீட்டினுள்ளே சென்று பார்க்கும் போது தான் பாம்பு ஒன்று இறந்து இருப்பதனையும், குழந்தை உயிருடன் இருப்பதனையும் தெரிய வந்தது. பின்,தன் குழந்தையைக் காப்பாற்றவே பாம்பைக் கீரி கொன்றது என்று உணர்ந்து வருந்தினாள்.அதனாலே அவள் கணவன் விட்டு பிரிந்தான்.        
         கோவலன் அவள் துயரத்தைக் கேட்டான்.அவள் கேட்டுக்கொண்டப்படி ஓலைச்சுவடியில் உள்ள பொருளையும் கூறினான்.மேலும்,கொலைத் தொழில் செய்தவளின் பாவம் நீங்குமாறு தானம் தருமங்கள் பலவும் செய்தான்.அவள் கணவனையும் தேடிப்பிடித்து சேர்த்து வைத்து,கைப்பொருள் பலவும் தந்தான்.
                                                     _________________________
                                              
                                                             ஆதிமந்தி கதை 


   
                            கரிகால் பெருவளத்தானுக்கு ஆதிமந்தி என்ற மகள் இருந்தாள். அவள் ஆட்டனத்தி என்ற சேர அரசனை மணம்புரிந்தாள். ஒரு சமயம் ஆதிமந்தியும்,அத்தியும் புதுபுனலில் நீராடினர்.அச்சமயத்தில் அத்தி வெள்ளத்தில் அடித்து சென்று கடல் கரையில் விழுந்தான். மருதி என்பவள் அவனைக் காப்பாற்றினாள்.ஆதிமந்தி கணவனைத் தேடி வரும்போது ,மருதி அவ்விருவரையும் சேர்த்து வைத்தாள் .


Popular posts from this blog

சிவபெருமானின் தோற்றப் புராணம்

     

சிவனின் அழித்தல் புராணம்