தமிழ் நூல்கள் பெரும்பான்மை சிறந்த நூல்களாகவே உள்ளன.அதில் சில நூல்கள் நாம் படித்தறிந்தால் நம் வாழ்விற்கும் ,பொழுதுபோக்கிற்க்கும் ஏற்றவையாக இருக்கும்.
நாவல்கள்
நாவல்கள்
கடல்புறா தமிழர்களின் வீர்த்தைச் சிறப்பை எடுத்துக்கூறும் நூல் .இந்நூலின் கதாநாயகன் கருணாகரத் தொண்டைமான் . இவன் முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தளபதி. இவனாலே சோழன் கலிங்க நாட்டை வெற்றி பெற முடிந்தது .கலிங்கத்துப்பரணி எனும் நூல் இப்போர் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது.
இந்நூல் போர் பற்றிய செய்திகளும் , முதலாம் குலோத்துங்க சோழன் பற்றிய குறிப்புகளும் தருகின்றன . இம்மன்னனைப் பற்றி அறிய விக்கிப்பீடியாவில் காணலாம்.
கடல் புறா எனும் நூலை எழுதியவர் சாண்டியல்யன் ஆவார். இவர் இந்நூல் தொடக்கத்திலிருந்து முடிவு வரைக்கும் விறுவிறுப்புடன் கொண்டு செல்கிறார். மேலும் ,போர் முறைகளை நுணுக்கமாகவும் கூறியுள்ளார் .தமிழர்கள் கப்பல் படையில் சிறந்து விளங்கியமையை இவர் எழுத்தால் நமக்கு புரிய வருகிறது .
_______________________________
சிறந்த இலக்கியங்கள்
நூல் பெயர் : ஆசாரக்கோவை
ஆசிரியர் பெயர் ; பெருவாயின்முள்ளியார்
நூல் வகை : இலக்கியம் (பதினெண்கீழ்க்கணக்கு)
பாடல் எண்ணிக்கை : 100
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள் , நாலடியார் போன்ற நூல்கள் சிறந்த நூல்களாக விளங்குகின்றன என்பது அனைவருமே அறிந்த ஒன்று தான் . அதில் ஆசாரக்கோவையும் அடங்கும்.
இந்நூல் மக்களின் ஒழுக்க முறைகளை எடுத்துரைப்பவை. மேலும்,அடிப்படையானவற்றை எளிமையான முறையில் கூறுபவை. மறந்து விட்ட விசயங்களை நினைவூட்டும் வகையில் இன்றையக்காலங்களில் பயன்படும் நூலாக உள்ளன. உதாரணமாக,சாப்பிடும் முறை ,உட்காரும் முறை ,குளியல் முறை ,உறங்கும் முறை போன்றவற்றை பற்றி விளக்கமாக கூறும் நூல் எனலாம். .இந்நூல் மாணவர்க்கு பாட நூலாக மட்டுமின்றி திருக்குறள் போன்று சமுதாயத்திற்க்கு அடிப்படையான நூல் என்றே கூறலாம்.இந்நூல் பற்றிய படிப்பினை,
தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் அறிந்து கொள்ளலாம்.
இந்நூல் கூறும் அடிப்படையானவற்றை நாம் நம் வாழ்நாளில் மேற்கொள்ளுவதன் வழியாக நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ளலாம் .