பத்மாவதி சரித்திரம்
(கல்விச் சிந்தனைகள்)
பத்மாவதி சரித்திரம் அ.மாதவையா அவர்களால்
எழுதப்பட்டது . இந்நாவலில் கதையை விடவும் கல்விக்கே முதன்மை அளிக்கப்பட்டுள்ளது. கதையூனூடே கல்வியைக் குறித்தலான சிந்தனைகள் பரவி காணப்படுகின்றன.
“தீயானது மனிதனுடைய சரீர சௌக்கியத்துக்கு எவ்வளவு அவசியமோ, அவ்வளவு கல்வியானது நம்முடைய நல்லொழுக்கத்துக்கும், சுகத்துக்கும் உயர் பதவிக்கும் அவசியமானது”
என்று கல்வி பற்றிய ஆழ்ந்த கருத்தினை நம்மால் உணர முடிகிறது.
ஆசிரியர் காலம்
அ.மாதவையா அவர்கள் வாழ்ந்த காலம் 1872 -1925 ஆம் ஆண்டு காலமாகும். இக்காலக்கட்டதில் கல்வி அறிவின்மை, பெண்களுக்கு பல உரிமைகள் மறுப்பு போன்றவைகள் நிகழ்த்த காலம் ஆகும் . அதனால்,ஆசிரியர் தம்முடைய நாவல்களில் அதனை வெளிப்படுத்தி காட்டியுள்ளார். அதுமட்டுமின்றி கல்வியின் சிறப்பை எடுத்துரைத்து அதன் வழியாக கல்வியின் முக்கியத்துவம்
குறித்தும், பெண்களுக்கு கல்வி அவசியம் என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளார் .

கற்பிக்கும் ஆசிரியர்
உலகில் பல தொழில்கள் உள்ளன. இருப்பினும் கற்பிக்கும்
தொழில் போல் மன நிம்மதி கொடுக்கும் தொழில் உண்டோ என்பது
இதுவரைக்கும் அறியப்படவில்லை.
இதனை ,
தொழில் போல் மன நிம்மதி கொடுக்கும் தொழில் உண்டோ என்பது
இதுவரைக்கும் அறியப்படவில்லை.
இதனை ,
“வாலிபரைத் தாயினும் அருமையாய் ஆதரித்து, அவர்களுக்கு அற்புதமான அறிவைப் புகட்டி அவர்கள் யுக்தி புத்திகளைச் சன்மார்க்கத்தில் செலுத்துவதிலும் மேன்மையான தொழில், மனிதனுக்குக் கிடைத்தலரிது. ஏனைய உத்தியோகங்கள் யாவற்றினும், எவ்வழியாவது, சிறிது பொய், புரட்டு, களவு, அநியாயம், ஏழைகளைத் துன்புறுத்துதல், கொடுமைகளைச் செய்யா வண்ணமாகச் செய்வித்தல் முதலிய பலவிதத் தீச்செயல்கள் நேரிடக்கூடும். இதிலோ அப்படியன்று; இது, தருமத்தைப்போல், ஈவோனுக்கும், ஏற்போனுக்கும் நன்மையையே பயக்கும் பண்புடைத்தாயிருக்கின்றது"
என்று ஆசிரியர் தொழிலே சிறந்த தொழிலெனக் கூறும் இவர்,
அரசர், மந்திரி, தாயைக் காட்டிலும், இராச்சியங்களை ஆளுவது
உண்மையிலே குழந்தைகளை ஆளும் பள்ளியாசிரியரே என்ற
கருத்தினைப் பதிவு செய்கிறார்.
அரசர், மந்திரி, தாயைக் காட்டிலும், இராச்சியங்களை ஆளுவது
உண்மையிலே குழந்தைகளை ஆளும் பள்ளியாசிரியரே என்ற
கருத்தினைப் பதிவு செய்கிறார்.
ஆசிரியர் இலக்கணம் கூறும் நன்னூல், ஆசிரியர் ஒழுக்கம்
கூறும் அற இலக்கியங்கள் தவிர, பல்வேறு காலங்களில் தோன்றிய இலக்கியங்களிலும் இக்கருத்தினைக் காணலாகிறது.
கூறும் அற இலக்கியங்கள் தவிர, பல்வேறு காலங்களில் தோன்றிய இலக்கியங்களிலும் இக்கருத்தினைக் காணலாகிறது.
“பள்ளியாசிரிய வேலையை வகிப்பவர்கள், எவ்வளவு புத்திமான்களாயும், பொறுமையுடையவர்களாயும்,இயற்கையாக அன்புப் பெருக்குடையவர்களாயும் மாசு மறுவற்ற மனமுடையோராயும் இருத்தல் வேண்டும்.......... சிலர், மூடர் ஆடு மாடுகளை அடிப்பதுபோல் குழந்தைகளை அடிக்கிறார்கள்; சிலர், எப்பொழுதும் கோபாவேசமாகவே இருக்கிறார்கள்; பெரும்பான்மையோர், தாங்கள் கற்பிக்கப் புகும் கல்வி விஷயத்தில் சர்வ மூடர்களாயிருக்கிறார்கள்”
என்று ஆசிரியர் இராஜகோபாலையர் என்ற கதாபாத்திரத்தின் வழியாக தமது சிந்தனையைச் சமுதாயத்தில் ஊடுருவ முயல்கிறார்.
கற்கும் முறை
“பத்மாவதி சரித்திரம்” ஒரு நாவல் என்பதைவிட, அ.மாதைய்யாவின் சிந்தனைக் களஞ்சியம் என்றே கூறலாம். ஓவியத்தில் இடம் பெற்றிருக்கும் வர்ணங்கள் போல் தம் சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளார். அதில் அதிக பங்கு
வகிப்பது படிப்பறிவு பற்றியே. பாரதியார்,
வகிப்பது படிப்பறிவு பற்றியே. பாரதியார்,
“காலை எழுந்தவுடன் படிப்பு . . .”
என்று கூறுவதுபோல், இந்நாவலில் வரும் நாராயணன்என்ற கதாப்பாத்திரத்தைப் படிப்பில் மீது கவனம் செலுத்துபவனாகக் காட்டுவதற்கு,
“வைகறையில் நாலு மணிக்கு முன்னதாகவே எழுந்து
படிக்கத் தொடங்கிவிடுவான்”
படிக்கத் தொடங்கிவிடுவான்”
என்று காட்டுவது மட்டுமில்லாமல் தான் படிக்கும் கம்பராமாணயம் போன்ற புத்தகங்களை நேசிப்பவனாகக்
காட்டியுள்ளார். மேலும்,
காட்டியுள்ளார். மேலும்,
“ஒருவன், ஒரே காலத்தில் புத்தகமும் படித்துக் கொண்டு பாட்டும் பாடிக்கொள்ள முயல்வானாயின், படிப்பும் பயன்படாது. பாட்டும் அகப்படாது, இவ்வுண்மை அறியாது, அநேகர், தாங்கள் கால துரிதஞ் செய்வதாக வீணில் கருதி, இரண்டு மூன்று வேலைகளை ஏககாலத்திற் கைக்கொண்டு, அதனாலுண்டாகுந் தவறுகளால், இயல்பாகச் செல்லக்கூடும் பொழுதிலும் அதிக நேரத்தைப் பாழாக்குகிறார்கள். ஒரே காலத்தில் ஒரே வேலை, அதை நன்றாய் செய்ய வேண்டும்”
என்றுரைப்பது மாணவர்களிடம் கொண்ட நல்லெண்ணம் புலனாகிறது.
பெண்கல்வி
பெண்கல்வி முக்கியத்துவம் குறித்து பலரும் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். தமிழ் நாவல்
வரலாற்றைப் பொறுத்தவரையில் இவரது பங்கும் அளப்பரியது
எனலாம்.
வரலாற்றைப் பொறுத்தவரையில் இவரது பங்கும் அளப்பரியது
எனலாம்.
“மாதவையாவின் .... படைப்பான ‘பத்மாவதி சரித்திரம்’ பெண்கல்விக்குக் காட்டிய பச்சை விளக்கு”
என்று தா.வே.வீரசாமி பாராட்டுபட்டுள்ளார். சமையல் அறையில் சட்டி, பானை, பாத்திரங்களோடுதான் பள்ளிக்கூடயெனச் சுட்டிக்காட்டி பெண்ணியம் பார்வையில் அணுகியுள்ளார் ஆசிரியர்.
“புருஷனிடத்தில் பணமிருந்தால் பெண் சாதிக்கு நகைகள்
செய்யலாம்; ஆனால், புருஷன் மட்டும் சாப்பிட்டால் பெண்சாதி
வயிறு நிறையுமா? அதுபோலதான் கல்வியும் அறிவும். ஆதலால்,
அறிவையடையும் பொருட்டு, மானிடப் பிறப்பு எடுத்தவர்கள்
யாவரும் கல்வி கற்க வேண்டும்; ஒருவருக்காக ஒருவர் படித்தால்
பயன்படாது”

என்று பெண்கல்வியை ஆதரிப்பதுடன், பெண்கள் படிக்காமல் மூடத்தனமாயிருப்பதையும் சாடுகிறார்.
கல்லாமை
கல்வி கற்பிக்கப்பட்டவர்கள் நல்ல குடிமக்களாக பாராட்டப்படுவதும், கல்லாதவர்கள் நரகிற்குச் செல்வர் என்பதும் நமது ஆன்றோரின் கூற்று. பத்மாவதி சரித்திரத்திலும்,
“கல்யாணத்தின் சந்தோஷத்துக்கு இடையூறாகவிருக்கும் படிப்பை முற்றிலுமே விட்டுவிட்டு, ஊரிலாவது, வேற இஷ்டமான இடத்திலாவது போயிருந்து கொண்டு, தொன்றுதொட்டு யாவராலும் புகழப்பட்டதாயும், உலகத்தில் முயற் கொம்புபோல அரிதாகவுமிருக்கிற இந்த மெய்யன்பு வெள்ளத்தில் மூழ்கித் தேக பரவசமான ஆனந்தத்தையடைந்து, அவள் மனம் போனபடியெல்லாம் நடந்து,ஏன் சுகமாகக் காலத்தைக் கழிக்கக் கூடாதென்று எண்ணுகிறேன். ஆனால், மேலான புத்திக்கு அது மிருகங்களின் வாழ்க்கைக்குச் சமமாகத் தோன்றுகிறது”
என்று எடுத்துரைக்கிறார். ஆசிரியர் இங்ஙனம் தனது கல்விக்
குறித்த சிந்தனைகளைக் கூறுவதோடு அல்லாமல், எதிர்பார்ப்பின்றி ஏழை மாணவர்க்குப் பாடம் புகட்டிய கிறித்துவர்களையும் புகழ்ந்துள்ளார். மற்ற நாவல்கள் போல் கதாபாத்திரங்கள் சிக்கலில் மீள்வது, செல்வத்தில் முன்னேறுவது, குடும்ப விருத்தியாவது என்று கூறாமல், கல்வியில் முன்னேறிய மேதைகளாகக் காட்டுவது
சிறப்புக்குரியது.

நாவல் நடுவில் திருக்குறள், கம்பராமாயணம், தாயுமானவர் பாடல்கள் போன்றவற்றை மேற்கோளாகப் பயன்படுத்திருப்பது இவரது கல்வித்திறனைக் காட்டுவதாய் உள்ளது. மேலும் தனது சிந்தனையைக் கல்வியில் மட்டும் திணிக்காமல், மகளிர் நிலை, பொருளாதாரம்,குடும்பத்தின் உறவு நிலை போன்றவற்றையும் காட்டியுள்ளார். கதையோட்டத்துடன் தனது சிந்தனையைப் புகட்டியிருப்பது இவ்வாசிரியரின் சிறப்பம்சமாகும்.